October 5, 2024

Tamil Avani News

மெய்ப்பொருள் காண்பது அறிவு

அமெரிக்கா ஐக்கியப்படுவதற்கான நேரமிது; ஜனாதிபதி ஜோ பைடன் மக்களுக்கு அழைப்பு

என்மீதும் துணை ஜனாதிபதியாக தெரிவு செய்யப்பட்டுள்ள கமலா ஹாரிஸ் மீதும் அமெரிக்க மக்கள் வைத்துள்ள நம்பிக்கை குறித்து நான் கௌரவம் அடைகின்றேன் என அமெரிக்காவின் புதிய ஜனாதிபதியாக தெரிவு செய்யப்பட்டுள்ள ஜோ பைடன் தெரிவித்துள்ளார்.

நாட்டு மக்களுக்கு நன்றி என தனது டுவிட்டர் பதிவில் கூறியுள்ள பைடன், “முன்னர் ஒருபோதும் இல்லாத தடைகளின் மத்தியில், முன்னொரு ஒருபோதும் இல்லாத அளவிற்கு மிகப்பெரும் எண்ணிக்கையான மக்கள் வாக்களித்தனர். இதன் மூலம் அவர்கள் அமெரிக்காவின் இதயத்தில் ஜனநாயகம் ஆழமாக துடிக்கின்றது என்பதை வெளிப்படுத்தினார்கள்.

நெருக்கடியான தருணத்தில் ஐக்கியப்படுங்கள், தேர்தல் பிரச்சாரம் முடிவடைந்துள்ள நிலையில் சீற்றத்தையும் கடுமையான கருத்துக்களையும் கைவிட்டுவிட்டு ஒரு தேசமாக ஒன்றிணைவோம்.

அமெரிக்கா ஐக்கியப்படுவதற்கான தருணமிது. காயங்களை ஆற்றுவதற்கான தருணமிது” என தெரிவித்துள்ளார்.