May 31, 2025 8:51:05

Tamil Avani News

மெய்ப்பொருள் காண்பது அறிவு

கமலா ஹாரிஸ்: அமெரிக்காவின் துணை- அதிபராகும் முதல் பெண்

அமெரிக்காவின் துணை-ஜனாதிபதியாக வெற்றி பெற்றுள்ள முதலாவது பெண்ணாக கமலா ஹாரிஸ் வரலாற்றில் இடம்பிடித்துள்ளார்.

கலிபோர்னியா மாநிலத்தின் முன்னாள் செனட்டரான கமலா ஹாரிஸ், இந்திய மற்றும் ஜமைக்க வம்சாவளியைச் சேர்ந்தவர்.

அமெரிக்காவின் துணை ஜனாதிபதியாக பதவி வகிக்கவுள்ள முதல் கலப்பின பெண் என்ற பெருமையும் அவரையே சாரும்.

இம்முறை ஜனநாயகக் கட்சியின் ஜனாதிபதி வேட்பாளர் தெரிவுப் போட்டியில் இறங்கியிருந்த கமலா ஹாரிஸால், போதுமான ஆதரவைப் பெற முடியாமல் போன நிலையில் அதிலிருந்து விலகியிருந்தார்.

ஜமைக்காவைச் சேர்ந்த  டொனால்ட் ஹாரிஸ் மற்றும் தமிழகத்தின் திருவாரூர் மாவட்டத்தைச் சேர்ந்த ஷியாமளா கோபாலன் தம்பதியினருக்கு கலிபோர்னியாவின் ஓக்லாண்டில் 1964- ம் ஆண்டில் பிறந்தார் கமலா ஹாரிஸ்.

பெற்றோரின் விவாகரத்தைத் தொடர்ந்து தாயாரிடம் வளர்ந்த கமலா ஹாரிஸ், கலிபோர்னியா பல்கலைக்கழகத்தில் சட்டம் பயின்றார்.

2003-ம் ஆண்டில், சான் பிரான்சிஸ்கோவின் தலைமை அரசதரப்பு வழக்கறிஞராகவும், பின்னர் கலிபோர்னியாவின் சட்டமா அதிபராகவும் பதவி வகித்தார். அமெரிக்காவின்

சனத்தொகையில் பெரிய மாநிலமான கலிபோரினியாவில் சட்டநிர்வாகத்தில் பெரும் பொறுப்பை வகித்த முதல் பெண் மற்றும் முதல் கறுப்பினத்தவர் என்ற பெருமையும் கமலா ஹாரிஸுக்கே உரியது.