June 12, 2025 22:57:09

Tamil Avani News

மெய்ப்பொருள் காண்பது அறிவு

‘அமெரிக்காவில் ஆட்சிமாற்றம் அமைதியான முறையில் இடம்பெறும்’

அமெரிக்காவில் ஆட்சிமாற்றம் அமைதியான முறையில் இடம்பெறும் என ஜனாதிபதி டொனால்ட் டிரம்பின் பொருளாதார ஆலோசகர் லாரி குட்லவ் தெரிவித்துள்ளார்.

பென்சில்வேனியாவில் பைடன் முன்னிலை பெற்று வெற்றியை நோக்கி சென்றுகொண்டிருக்கும் நிலையில், டிரம்பின் பொருளாதார ஆலோசகர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.

அமைதியான முறையில் ஆட்சிமாற்றம் இடம்பெறும் என நான் நினைக்கின்றேன். இது மிகப்பெரும் தேசம். இது உலகின் மிகப்பெரும் ஜனநாயக நாடு.அந்த அடிப்படையில் நாங்கள் சட்டத்தை மதிக்கின்றவர்கள். ஜனாதிபதியும் அப்படிப்பட்டவர் என லாரி குட்லவ் குறிப்பிட்டுள்ளார்.