November 22, 2024

Tamil Avani News

மெய்ப்பொருள் காண்பது அறிவு

‘அமெரிக்க ஜனாதிபதி தேர்தலில் யார் வென்றாலும் சீனா குறித்த அமெரிக்காவின் நிலைப்பாடு மாறாது’

அமெரிக்க தேர்தல் முடிவுகள் எதுவாக அமைந்தாலும் சீனா தொடர்பான அமெரிக்காவின் நிலைப்பாட்டில் மாற்றம் ஏற்படாது என சீனாவிற்கான முன்னாள் இந்திய தூதுவர் கௌதம் பம்பவாலே தெரிவித்துள்ளார்.

ஜனநாயக கட்சியின் வேட்பாளர் ஜோ பைடன் வெற்றிபெற்றால் அவர் செயற்படும் விதத்தில் வித்தியாசங்கள் இருக்கலாம். ஆனால் அமெரிக்காவின் சீனா குறித்த கொள்கையில் மாற்றங்கள் இருக்காது என அவர் தெரிவித்துள்ளார்.

அவர் மேலும் தெரிவிக்கையில்;

டிரம்பும் பைடனும் செயற்படும் விதத்தில் மாற்றங்கள் இருக்கலாம். ஆனால் கொள்கைகள் மாறப்போவதில்லை. சீனா ஜனநாயக கட்சியின் வேட்பாளர் வெல்லவேண்டும் என்றே விரும்புகின்றது என அறிய முடிந்துள்ளது.

பைடன் வெல்வதையும் டிரம்ப் தோற்பதையுமே சீனா ஆய்வாளர்களும் அவதானிகளும் விரும்பக்கூடும். புதிய ஜனாதிபதி செயற்படும் விதத்தில் மாற்றங்களை அவர்கள் விரும்பக்கூடும். டிரம்ப் சீனா குறித்து கடுமையாகயிருந்துள்ளார் என அவர்கள் கருதுகின்றனர்.

அமெரிக்காவுக்கும் சீனாவிற்கும் இடையில் வர்த்தக தொழில்நுட்ப போர் இடம்பெறுகின்றது.இந்தோ- பசுபிக்கில் நெருக்கடியான நிலை காணப்படுகின்றது.தென் சீனாவில் அமெரிக்காவும் வலுவாக உள்ளது எனவும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.