April 29, 2025 21:46:51

Tamil Avani News

மெய்ப்பொருள் காண்பது அறிவு

பரிசுத்த பாப்பரசர் பிரான்சிஸ் காலமானார்!

பரிசுத்த பாப்பரசர் பிரான்சிஸ் தனது 88 ஆவது வயதில் காலமானார்.
இந்தத் தகவலை வத்திக்கான் அறிவித்துள்ளது.

12 வருடங்களாக அவர் பரிசுத்த பாப்பரசராக சேவையாற்றிய நிலையில் நிமோனியா தொற்று காரணமாக கடந்த பெப்ரவரி மாதம் ரோமிலுள்ள வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்றுவந்தார்.

வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று கடந்த மார்ச் 23ஆம் திகதியன்று வத்திக்கானுக்கு திரும்பினார்.

இந்நிலையில், நேற்று (20) ஈஸ்ரர் திருநாளை முன்னிட்டு வத்திக்கான் சதுக்கத்தில் கூடிய ஆயிரக்கணக்கான மக்களை நோக்கி புனித பேதுரு பேராலயத்தில் இருந்தவாறு கையசைத்து ஈஸ்டர் வாழ்த்து தெரிவித்தார் என்பதும் குறிப்பிடத்தக்கது.