January 18, 2025

Tamil Avani News

மெய்ப்பொருள் காண்பது அறிவு

அமெரிக்க ஜனாதிபதி தேர்தல் முடிவுகள்: முன்னிலையில் யார்?

அமெரிக்க ஜனாதிபதி தேர்தல் செவ்வாய்க்கிழமை நடைபெற்றதுடன் அதன் முடிவுகள் தற்போது வெளியாகி கொண்டிருக்கின்றன.
இதுவரை வெளியான தேர்தல் முடிவுகளின்படி டொனால்ட் டிரம்ப் முன்னிலை வகிக்கிறார்.

அதற்கமைய ட்ரம்ப் 230 இடங்களையும் கமலா ஹாரிஸ் 210 இடங்களையும் கைப்பற்றியுள்ளனர்.

நாடளாவிய ரீதியில் மொத்தம் உள்ள 50 மாகாணங்களில் 538 தேர்வுக்குழு உறுப்பினர்கள் உள்ளனர். அவரில் 270 பேரின் ஆதரவை பெறும் வேட்பாளர் அமெரிக்காவின் 47ஆவது ஜனாதிபதியாக தெரிவு செய்யப்படவுள்ளார்.

பலத்த எதிர்பார்ப்புக்கு மத்தியில் நேற்று நடைபெற்ற ஜனாதிபதி தேர்தலில், 16 கோடிக்கும் மேற்பட்டவர்கள் வாக்களிக்க தகுதி பெற்றிருந்தனர். அவர்களில் 7 கோடிக்கும் அதிகமானோர் ஏற்கனவே வாக்களித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.