இஸ்ரேலை நோக்கி ஏவுகணை தாக்குதல்களை இரான் ஆரம்பித்துள்ளது.
இஸ்ரேல் மீது இரான் செவ்வாய்க்கிழமை சரமாரியான ஏவுகணை தாக்குதல்களை நடத்தியுள்ளது.
தலைநகர் டெல் அவில் மீது 180க்கும் மேற்பட்ட ஏவுகணைகள் ஏவப்பட்டுள்ளதாக அந்நாட்டு இராணுவம் உறுதிப்படுத்தியுள்ளது.
லெபனான் மீது தொடர்ந்து தாக்குதல் நடத்திய இஸ்ரேலுக்கு பதிலடி கொடுக்கும் வகையில் இரான் இந்த தாக்குதலை மேற்கொண்டு வருவதாக தெரிவிக்கப்படுகிறது.
இந்நிலையில், இஸ்ரேலுக்கு ஆதரவாகவும், அந்நாட்டை பாதுகாக்கவும் அமெரிக்கா களமிறங்கியுள்ளது.
இஸ்ரேல் கடற்பரப்பில் நிலைகொண்டிருந்த இரண்டு அமெரிக்க போர் கப்பல்கள் ஈரானின் ஏவுகணைகளை தாக்கி அழிக்கும் பணியில் ஈடுபட்டதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
இந்த நிலைமையில் மூன்றாம் உலகப் போர் உருவாகும் அபாயம் குறித்து சர்வதேச நாடுகள் மத்தியில் அச்சம் ஏற்பட்டுள்ளது.