அமெரிக்க ஜனாதிபதித் தேர்தலின், சகல மாநிலங்களினதும் இறுதி முடிவுகளின் பிரகாரம் தேர்தல் கல்லூரியில் ஜனநாயகக் கட்சி வேட்பாளர் ஜோ பைடன் 306 வாக்குகளையும் குடியரசுக் கட்சி வேட்பாளர் டொனால்ட் ட்ரம்ப் 232 வாக்குகளையும் வென்றுள்ளனர்.
சில மாநிலங்களில் இரண்டு வேட்பாளர்களுக்கும் இடையில் மிகவும் குறைந்தளவான வாக்கு வித்தியாசமே காணப்பட்டதால் சகல வாக்குகளும் எண்ணப்பட்ட பின்னரே அந்த மாநிலங்களின் வெற்றியாளரை உறுதி செய்யக்கூடிய நிலை காணப்பட்டது.
ஆரம்பம் முதலே, ட்ரம்ப் முன்னிலை வகித்த பென்சில்வேனியா மற்றும் ஜோர்ஜியா ஆகிய மாநிலங்கள் இறுதிக் கட்டத்தில் பைடன் பக்கம் சாய்ந்தன. பென்சில்வேனியாவில் கிடைத்த 20 வாக்குகள் மூலம் பைடன் ஜனாதிபதி ஆவதற்குத் தேவையான குறைந்தபட்ச ஆதரவு (270 வாக்குகள்) கிடைத்தது.
இறுதியாக எஞ்சியிருந்த இரண்டு மாநிலங்களில் ஜோர்ஜியாவை ஜோ பைடனும், நோர்த் கரோலினாவை டொனால்ட் ட்ரம்பும் வெற்றி கொண்டுள்ளனர்.
கடுமையான போட்டி நிலவிய முக்கிய மாநிலங்கள்:
பென்சில்வேனியா (20 தே.க. வாக்குகள்): பைடன் வெற்றி; ட்ரம்ப் முன்னிலை பெற்றிருந்த மாநிலம் திடீர் திருப்பமாக பைடன் பக்கம் மாறியது.
அரிசோனா (11 தே.க. வாக்குகள்): பைடன் வெற்றி
ஜோர்ஜியா (16 தே.க. வாக்குகள்):பைடன் வெற்றி; ட்ரம்ப் முன்னிலை பெற்றிருந்த மாநிலம் திடீர் திருப்பமாக பைடன் பக்கம் மாறியது. இம்முறை ஜனநாயகக் கட்சியின் பக்கம் சாய்ந்துள்ள 5 மாநிலங்களில் ஒன்று; 1992 ஆம் ஆண்டு பில் கிளிண்டன் வென்ற பின்னர் பைடன் தான் அந்த மாநிலத்தை வென்றுள்ள முதல் ஜனநாயகக் கட்சி வேட்பாளர்.
நெவாடா (6 தே.க. வாக்குகள்): பைடன் வெற்றி; தபால் வாக்குகள் எண்ணும் பணியில் ஏற்பட்ட தாமதத்தால், தேர்தல் நிறைவடைந்து 4 நாட்களின் பின்னரே முடிவு வெளியானது.
நோர்த் கரோலினா (15 தே.க. வாக்குகள்): ட்ரம்ப் வெற்றி; பாரம்பரியமாக குடியரசுக் கட்சி ஆதரவுத் தளம். கறுப்பினத்தவர்களின் வாக்குகளின் உதவியுடன் மாநிலத்தை வெல்ல பைடன் அணி முயன்ற போதிலும், கிராமப்புற வெள்ளையின- தீவிர ட்ரம்ப் ஆதரவாளர்களை வெல்லும் அளவுக்கு முயற்சி வெற்றியளிக்கவில்லை.
தாம் வெற்றிகொண்டுள்ள மாநிலங்களிலிருந்து மொத்தமாக குறைந்தது 270 தேர்தல் கல்லூரி வாக்குகளைப் பெறும் வேட்பாளர் ஜனாதிபதியாக தேர்ந்தெடுக்கப்படுவார்.
இதுவரை வெளியான – 50/50 மாநிலங்களின் – முடிவுகளின் படி:
-
ஜனநாயகக் கட்சி வேட்பாளர் ஜோ பைடன்: 306 வாக்குகள் (தேர்தல் கல்லூரி) பெற்று வெற்றியடைந்துள்ளார்.
-
குடியரசுக் கட்சி வேட்பாளர் டொனால்ட் டரம்ப்: 232 வாக்குகள் (தேர்தல் கல்லூரி)
ஜோ பைடன் வென்றுள்ள மாநிலங்கள்:
- வேர்மொன்ட் (3 தே.க. வாக்குகள்)
- மஸச்சூஸட்ஸ் (11 தே.க. வாக்குகள்)
- நியு ஜெர்ஸி (14 தே.க. வாக்குகள்)
- மேரிலாண்ட் (10 தே.க. வாக்குகள்)
- டெலவேர் (3 தே.க. வாக்குகள்)
- டிஸ்ட்ரிக்ட் ஆஃப் கொலம்பியா (3 தே.க. வாக்குகள்)
- கொலராடோ (9 தே.க. வாக்குகள்)
- நியூ யோர்க் (29 தே.க. வாக்குகள்)
- கனெக்டிகட் (7 தே.க. வாக்குகள்)
- நியூ மெக்ஸிக்கோ (5 தே.க. வாக்குகள்)
- கனெக்டிகட் (7 தே.க. வாக்குகள்)
- வாஷிங்டன் (12 தே.க. வாக்குகள்)
- நியூ ஹாம்ப்ஷயர் (4 தே.க. வாக்குகள்)
- இல்லினாய்ஸ் (20 தே.க. வாக்குகள்)
- ஓரிகன் (7 தே.க. வாக்குகள்)
- கலிபோர்னியா (55 தே.க. வாக்குகள்)
- வர்ஜினியா (13 தே.க. வாக்குகள்)
- ரோட் ஐலண்ட் (4 தே.க. வாக்குகள்)
- மினசோட்டா (10 தே.க. வாக்குகள்)
- ஹவாய் (4 தே.க. வாக்குகள்)
- மேய்ன் (3 தே.க. வாக்குகள்)
- மிச்சிகன் (16 தே.க. வாக்குகள்)
- விஸ்கொன்சின் (10 தே.க. வாக்குகள்)
- பென்சில்வேனியா (20 தே.க. வாக்குகள்)
- நெவாடா (6 தே.க. வாக்குகள்)
- அரிசோனா (11 தே.க. வாக்குகள்)
- ஜோர்ஜியா (16 தே.க. வாக்குகள்)
டொனால்ட் டரம்ப் வென்றுள்ள மாநிலங்கள்:
- இண்டியனா (11 தே.க. வாக்குகள்)
- கென்டக்கி (8 தே.க. வாக்குகள்)
- டென்னெஸ்ஸி (11 தே.க. வாக்குகள்)
- ஒக்லஹோமா (7 தே.க. வாக்குகள்)
- வெஸ்ட் வர்ஜினியா (5 தே.க. வாக்குகள்)
- சவுத் டக்கோடா (3 தே.க. வாக்குகள்)
- ஆர்கன்ஸாஸ் (6 தே.க. வாக்குகள்)
- நோர்த் டகோடா (3 தே.க. வாக்குகள்)
- அலபாமா (9 தே.க. வாக்குகள்)
- சவுத் கரோலினா (9 தே.க. வாக்குகள்)
- நெப்ராஸ்கா (5 தே.க. வாக்குகள்)
- லூசியானா (8 தே.க. வாக்குகள்)
- மிசூரி (10 தே.க. வாக்குகள்)
- வயோமிங் (3 தே.க. வாக்குகள்)
- மிசிசிப்பி (6 தே.க. வாக்குகள்)
- ஒகாயோ (18 தே.க. வாக்குகள்)
- இடாஹோ (4 தே.க. வாக்குகள்)
- உட்டா (6 தே.க. வாக்குகள்)
- புளோரிடா (29 தே.க. வாக்குகள்)
- கன்சாஸ் (6 தே.க. வாக்குகள்)
- அயோவா (6 தே.க. வாக்குகள்)
- மொன்டானா (3 தே.க. வாக்குகள்)
- டெக்சாஸ் (38 தே.க. வாக்குகள்)
- அலாஸ்கா (3 தே.க. வாக்குகள்)
- நோர்த் கரோலினா (15 தே.க. வாக்குகள்)
அமெரிக்காவின் அடுத்த ஜனாதிபதி யார்?
ஒவ்வொரு மாநிலத்திலும் ஆகக்கூடுதலான வாக்குகளைப் பெறும் வேட்பாளர் அந்த மாநிலத்தை வெற்றிகொண்டவராகக் கருதப்படுவார். ஒவ்வொரு மாநிலத்தின் சனத்தொகைக்கும் ஏற்ப அந்தந்த மாநிலத்துக்கு ஒதுக்கப்பட்டுள்ள ஒட்டுமொத்த ‘தேர்தல் கல்லூரி வாக்குகளும்’ அந்த வேட்பாளருக்கே கிடைக்கும். அதிமான தேர்தல் கல்லூரி வாக்குகளைப் பெறும் வேட்பாளர் ஜனாதிபதியாக தேர்ந்தெடுக்கப்பட்டவராக அறிவிக்கப்படுவார்.
அமெரிக்க ஜனாதிபதி தேர்தல் முறை
அமெரிக்க ஜனாதிபதித் தேர்தலைப் பொறுத்த வரையில், மாநிலவாரியாகவே வாக்களிப்பு இடம்பெற்று முடிவுகள் தீர்மானிக்கப்படுகின்றன.
50 மாநிலங்களிலும் உள்ள மக்கள் தாம் விரும்பும் வேட்பாளர்களில் ஒருவரை ஆதரிக்கும் தேர்தல் கல்லூரி உறுப்பினர்களுக்கே வாக்களிப்பார்கள். குறித்த உறுப்பினர்கள் பின்னர் தாம் ஆதரிக்கும் வேட்பாளருக்கு வாக்களிப்பார்கள்.
ஒரு மாநிலத்திலும் ஒட்டுமொத்தமாக ஆகக்கூடுதலான வாக்குக்களைப் பெறும் வேட்பாளருக்கே குறித்த மாநிலத்தின் ஒட்டுமொத்த தேர்தல் கல்லூரி உறுப்பினர்களின் வாக்குகளும் சேரும்.
ஒவ்வொரு மாநிலமும் அமெரிக்க நாடாளுமன்றமான காங்கிரஸில் கொண்டுள்ள உறுப்பினர்களுக்கு சமனான எண்ணிக்கையில் தேர்தல் கல்லூரி உறுப்பினர்களை கொண்டுள்ளன.
மொத்தமாக உள்ள 538 தேர்தல் கல்லூரி வாக்குகளில் குறைந்தது 270 வாக்குகளைப் பெறும் வேட்பாளர் ஜனாதிபதியாக வெற்றி பெறுவார்.
முழு நாட்டிலும் ஒட்டுமொத்தமாக அதிக வாக்குகளைப் பெறுபவர் கூட இந்தத் தேர்தல் முறையால், தோல்வியடையும் நிலை ஏற்படலாம். 2016-ம் ஆண்டில் ஹிலரி கிளிண்டனுக்கு இந்த நிலையே ஏற்பட்டது; அதிக மக்களின் வாக்குகளை வென்ற போதிலும், தேவையான அளவு தேர்தல் கல்லூரி உறுப்பினர்களை அவரால் வெல்ல முடியவில்லை.