தற்காலிக போர் நிறுத்தத்தின் பின்னர் இஸ்ரேலுக்கும் காஸாவில் உள்ள ஹமாஸ் அமைப்பினருக்கும் இடையிலான மோதல்கள் மீண்டும் தொடங்கியுள்ளதாக சர்வதேச செய்திகள் வெளியாகியுள்ளன.
ஒக்டோபர் 24ஆம் திகதி முதல் 30ஆம் திகதி வரையில் இரு தரப்பினருக்கும் இடையில் 7 நாட்கள் தற்காலிக போர் நிறுத்தம் ஏற்படுத்தப்பட்டிருந்தது.
பணயக் கைதிகளை விடுவிக்கும் வகையில் இந்த போர் நிறுத்தம் ஏற்படுத்தப்பட்டிருந்த நிலையில், இந்தக் காலப்பகுதியில் ஹமாஸால் கடத்தப்பட்ட 110 பணயக்கைதிகளும், இஸ்ரேல் சிறைகளில் அடைக்கப்பட்டிருந்த 240 பாலஸ்தீனியர்களும் விடுவிக்கப்பட்டுள்ளனர்.
இந்நிலையில் தற்போது இரு தரப்பினருக்கும் இடையே மீண்டும் போர் ஆரம்பமாகியுள்ளதாகவும், இதன்படி காஸாவில் இருந்து இஸ்ரேலை நோக்கி ஏவுகணைகள் ஏவப்பட்டதாகவும், அந்த ஏவுகணைகளை இஸ்ரேல் இராணுவம் சுட்டு வீழ்த்தியதாகவும் சர்வதேச ஊடகங்கள் தெரிவித்துள்ளன.
இதற்கிடையில், காஸா பகுதியில் உள்ள ஹமாஸின் இலக்குகள் மீது வான்வழித் தாக்குதல் நடத்தியதாக இஸ்ரேல் பாதுகாப்புப் படை தெரிவித்துள்ளது.