இஸ்ரேல் – காஸா இடையிலான போர் 43ஆவது நாளாக தொடர்கிறது.
காஸா மீது கடந்த வாரங்களில் வான்வழி தாக்குதல்களை தொடர்ந்த இஸ்ரேல் இராணுவம் தற்போது தரை வழி தாக்குதல்களை ஆரம்பித்துள்ளன.
இந்நிலையில் காஸாவில் போரால் கொல்லப்பட்டவர்களின் எண்ணிக்கை 12,000ஐ கடந்துள்ளதாக காஸாவின் சுகாதார அமைச்சு தகவல்களை ஆதாரம் காட்டி சர்வதேச செய்திகள் தெரிவிக்கின்றன.
உயிரிழந்தவர்களிடையே 5000 சிறுவர்கள் உள்ளடங்குவதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.
இதேவேளை காஸாவில் 1,800 குழந்தைகள் உட்பட 3,570-க்கும் மேற்பட்டோர் காணாமல் போயுள்ளதாகவும் சர்வதேச ஊடகங்கள் தெரிவித்துள்ளன.
இந்நிலையில், காஸாவின் அல்-ஷிஃபா மருத்துவமனையை இஸ்ரேல் இராணுவத்தினர் ஆக்கிரமித்துள்ளனர்.
அவர்கள் அங்கே ஹமாஸ் படையினரை தேடும் பணிகளில் ஈடுபட்டுள்ளதுடன், அங்கே சுரங்க பாதைகள் இருக்கின்றனவா என்றும் தேடுதல்களில் ஈடுபட்டுள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளன.
.