January 18, 2025

Tamil Avani News

மெய்ப்பொருள் காண்பது அறிவு

லெவிஸ்டன் துப்பாக்கிச் சூட்டில் 22 பேர் பலி!

அமெரிக்காவின் மைன் நகர் – லெவிஸ்டன் பகுதியில் நடந்த தொடர் துப்பாக்கிச் சூட்டில் 22 பேர் உயிரிழந்துள்ளனர்.

25ஆம் திகதி இரவு நபரொருவர் உணவகம், விளையாட்டு ஒழுங்கை உள்ளிட்ட பல இடங்களில் இவ்வாறாக துப்பாக்கிச் சூட்டை நடத்தியுள்ளார்.

இதில் 22 பேர் உயிரிழந்துள்ளதுடன், 60க்கும் மேற்பட்டோர் கயமடைந்த நிலையில் மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

இதேவேளை, துப்பாக்கிச் சூடு நடத்தியவர் என சந்தேகிக்கப்படும் நபர் தற்போது அடையாளம் காணப்பட்டுள்ளதாக அந்நாட்டு ஊடகங்கள் தெரிவிக்கின்றன.

அவர் ரொபர்ட் கார்ட் என அடையாளம் காணப்பட்டுள்ளார்.
இவர் இராணுவத்தினரால் துப்பாக்கி பயிற்றுவிப்பாளராக பயிற்சி பெற்றவர் என தகவல் வெளியாகியுள்ளதாக அந்த நாட்டின் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

குறித்த நபரை கைது செய்வதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாக லெவிஸ்டன் பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.