January 18, 2025

Tamil Avani News

மெய்ப்பொருள் காண்பது அறிவு

மொராக்கோ நிலநடுக்கத்தில் பலியானோர் எண்ணிக்கை இரண்டாயிரத்தை தாண்டியது!

மொராக்கோவில் வெள்ளிக்கிழமை ஏற்பட்ட சக்திவாய்ந்த நிலநடுக்கத்தில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 2000ஐ கடந்துள்ளதாக சர்வதேச செய்திகள் தெரிவிக்கின்றன.

வெள்ளிக்கிழமை நள்ளிரவு 11.11 மணிக்கு ரிக்டர் 6.8 அளவில் சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது.

இதனை தொடர்ந்தும் சில நில அதிர்வுகள் அங்கு பதிவாகியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

இந்நிலையில் ஆரம்பத்தில் 300 பேர் வரையிலானோரே உயிரிழந்துள்ளதாக கூறப்பட்ட போதும், அந்த எண்ணிக்கை இரண்டாயிரத்தை கடந்துள்ளதாக சர்வதேச செய்திகள் தெரிவிக்கின்றன.

இதேவேளை உயிரிழந்தோர் எண்ணிக்கை மேலும் அதிகரிக்க வாய்ப்புள்ளதாகவும் மீட்பு பணியாளர்கள் தெரிவித்துள்ளனர்.

அத்துடன் கட்டட இடிபாடுகளுக்குள் இருந்து பலர் காயங்களுடன் மீட்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

நில அதிர்வுகளால் பல பிரதேசங்களில் வீதிகள் உடைந்துள்ளதால் மீட்புப் பணியாளர்கள் அந்த பிரதேசங்களை நெருங்குவதில் சிக்கல்களை எதிர்கொண்டுள்ளதாகவும் செய்திகள் தெரிவிக்கின்றன.