January 18, 2025

Tamil Avani News

மெய்ப்பொருள் காண்பது அறிவு

‘வாக்னர்’ படைத் தளபதி விமான விபத்தில் உயிரிழந்தார்?

Photo: SocialMedia

ரஷ்யாவில் விமான விபத்தில் சிக்கி ‘வாக்னர்’ கூலிப்படையின் தளபதி எவ்ஜெனி பிரிகோசின் உயிரிழந்துள்ளதாக சர்வதேச செய்திகள் தெரிவிக்கின்றன.

ரஷ்யாவில் மொஸ்கோ நகரிலிருந்து பயணமான தனியார் விமானமொன்று டிவெர் மாகாணத்தில் விபத்துக்கு உள்ளாகியுள்ளதாகவும், இதில் 10 பேர் உயிரிழந்துள்ள நிலையில் அவர்களிடையே ‘வாக்னர்’ படைத் தளபதியும் உள்ளடங்குவதாகவும் தெரிவிக்கப்பட்டள்ளது.

ரஷ்யாவில் ‘வாக்னர்’ எனும் தனியார் இராணுவ அமைப்பு ரஷ்ய ஜனாதிபதிக்கு எதிரான கிளர்ச்சியை ஜுலை மாதமளவில் முன்னெடுத்தது.

எவ்ஜெனி பிரிகோசின்

இது பெரும் புரட்சியாக வெடிக்கலாம் என உலகமே எதிர்பார்த்திருந்த நிலையில், ரஷ்ய ஜனாதிபதி புடின் இந்தக் கிளர்ச்சியை சாமர்த்தியமாக அடக்கிவிட்டார்.
அந்த அமைப்பின் தலைவர் எவ்ஜெனி பிரிகோசின் ரஷ்யாவை விட்டு பெலாரஸ் நாட்டில் தஞ்சமடைந்திருந்தார்.

இந்நிலையில், ரஷ்யாவின் டிவெர் மாகாணத்தில் நடந்த விமான விபத்தில் அவர் உயிரிழந்துள்ளார் என அந்நாட்டு அதிகாரிகள் தகவல் தெரிவித்துள்ளனர்.

விமான பயணிகள் பட்டியலில் பிரிகோசின் பெயர் உள்ளதாகவும், உயிரிழந்தவர்களில் பிரிகோசின் இன்னும் அடையாளம் காணப்படவில்லை என தகவல்கள் வெளியாகியுள்ளன.