November 25, 2024

Tamil Avani News

மெய்ப்பொருள் காண்பது அறிவு

ஹவாய் தீவில் காட்டுத் தீயின் போது கடலுக்குள் பாய்ந்தவர்கள் எங்கே?

அமெரிக்கா – ஹவாய் தீவின் லஹைனா கடற்கரை நகரில் ஏற்பட்ட காட்டுத் தீயால் உயிரிழந்தோர் எண்ணிக்கை 100 ஐ நெருங்கியுள்ளதாக சர்வதேச செய்திகள் தெரிவிக்கின்றன.

இதேவேளை காட்டுத் தீயை தொடர்ந்து அங்கு வசித்த ஆயிரம் பேர் வரையில் காணாமல் போயுள்ளதாகவும், அவர்களை தேடி விசேட குழுக்கள் தேடுதலில் ஈடுபட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.

காட்டுத் தீயின் போது பலர் கடலுக்குள் பாய்ந்து தீயில் இருந்து தப்பிக்க முயற்சித்துள்ளதாகவும், இவர்களில் பலரும் காணாமல் போயுள்ளதாகவும் சர்வதேச செய்திகள் தெரிவிக்கின்றன.

இதனால் பலி எண்ணிக்கை மேலும் அதிகரிக்கலாம் என்று அஞ்சப்படுவதாக ஹவாய் ஆளுநர் ஜோஷ் கிரீன் தெரிவித்துள்ளார்.

ஹவாய் தீவு இதுவரை சந்தித்திராத மிக மோசமான இயற்கை பேரழிவு இதுவென ஆளுநர் ஜோஷ் கிரீன் சுட்டிக்காட்டியுள்ளார்.

இந்த தீவில் நூற்றுக்கணக்கான கட்டிடங்கள் சேதமடைந்துள்ளதுடன், 12 ஆயிரத்துக்கும் மேற்பட்ட மக்கள்  தீவிலிருந்து வெளியேறியுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.

தீவின் லஹைனா நகரில் செவ்வாய்க்கிழமை அதிகாலையில் காட்டுத் தீ பரவத் தொடங்கியது. பின்னர்  லஹைனா முழுவதும் தீ ஆக்கிரமித்தமை குறிப்பிடத்தக்கது.