January 18, 2025

Tamil Avani News

மெய்ப்பொருள் காண்பது அறிவு

ஹவாய் தீவில் பயங்கர காட்டுத் தீ: பலர் உயிரிழப்பு!

Photo: Twitter

அமெரிக்கா – ஹவாய் தீவின் லஹைனா கடற்கரை நகரில் ஏற்பட்ட பயங்கர காட்டுத் தீயால் பலர் உயிரிழந்துள்ளதாக சர்வதேச செய்திகள் தெரிவிக்கின்றன.

இதுவரையில் 50க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

மேலும் இந்த தீவில் நூற்றுக்கணக்கான கட்டிடங்கள் சேதமடைந்துள்ளதுடன், 12 ஆயிரத்துக்கும் மேற்பட்ட மக்கள்  தீவிலிருந்து வெளியேறியுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.

தீவின் லஹைனா நகரில் செவ்வாய்க்கிழமை அதிகாலையில் காட்டுத் தீ பரவத் தொடங்கியது. பின்னர்  லஹைனா முழுவதும் தீ ஆக்கிரமித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

தற்பேது தீயை அணைக்க தீயணைப்பு வீரர்கள் தீவிரமாக களமிறங்கியுள்ளனர்.

இதனால் மவுயி தீவில் விமானங்கள் இரத்து செய்யப்பட்டுள்ளன. காட்டுத்தீயை அணைத்து, மீட்புப்பணியை தீவிரப்படுத்துமாறு அமெரிக்க அதிபர் ஜோ பைடன் உத்தரவிட்டுள்ளார்.