November 24, 2024

Tamil Avani News

மெய்ப்பொருள் காண்பது அறிவு

பாகிஸ்தான் பாராளுமன்றம் கலைக்கப்பட்டது!

பாகிஸ்தான் பாராளுமன்றம் ஆகஸ்ட் 9 ஆம் திகதி நள்ளிரவுடன் கலைக்கப்பட்டது.

பாராளுமன்றத்தின் பதவிக் காலம் வரும் 12 ஆம் திகதியுடன் முடிவடைய இருந்த நிலையில், அதற்கு முன்னதாகவே அது கலைக்கப்பட்டுள்ளது.

பாராளுமன்றத்தைக் கலைக்க கோரி பிரதமர் ஷபாஸ் ஷெரீப் அதிபருக்கு கடிதம் எழுதியிருந்தார். இதனை தொடர்ந்து பாகிஸ்தான் அதிபர் ஆரிப் ஆல்வி பாராளுமன்றத்தை கலைக்க உத்தரவிட்டார்.

இவ்வாறு பாராளுமன்றம் முன்கூட்டியே கலைக்கப்பட்டதால் தேர்தல் நடத்த 90 நாட்கள் அவகாசம் வழங்கப்படுகிறது.

இதன்படி எதிர்வரும் நவம்பர் மாதத்தில் தேர்தலை நடத்த திட்டமிடப்படுவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.