பாகிஸ்தான், சிந்து மாகாணத்தின் சஹாரா ரயில் நிலையம் அருகே இடம்பெற்ற ரயில் விபத்தில் 20க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர்.
கராச்சியில் இருந்து அபோதாபாத் நோக்கிச் சென்று கொண்டிருந்த குறித்த ரயிலின் பெட்டிகள் சில தண்டவாளத்தில் இருந்து விலகி தடம் புரண்டுள்ளது.
இதன்போது ரயிலில் பயணித்த 22 பேர் உயிரிழந்துள்ளதுடன், 80க்கும் மேற்பட்டோர் படுகாமயடைந்த நிலையில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
சம்பவத்தின் பின்னர் குறித்த பகுதிக்கு மீட்பு ரயில்கள் அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.