May 25, 2025 5:18:50

Tamil Avani News

மெய்ப்பொருள் காண்பது அறிவு

இம்ரான் கானுக்கு சிறைத்தண்டனை விதிப்பு!

பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் இம்ரான் கானுக்கு மூன்று ஆண்டுகள் சிறைத்தண்டனை விதித்து அந்நாட்டு நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.

தான் பிரதமராக இருந்த காலப்பகுதியில் மேற்கொண்டதாக கூறப்படும் ஊழல் மோசடிகள் தொடர்பான குற்றச்சாட்டுகள் குறித்த வழக்கொன்றிலேயே அவருக்கு இந்த சிறைத்தண்டனை வழங்கப்பட்டுள்ளதாக வௌிநாட்டு ஊடகங்கள் செய்தி வௌியிட்டுள்ளன.

குறித்த வழக்கில் சிறைத் தண்டனைக்கு மேலதிகமாக  5 ஆண்டுகள் தகுதி நீக்கம் மற்றும் ஒரு லட்சம் ரூபாய் அபராதமும் இம்ரான் கானுக்கு விதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

எவ்வாறாயினும், தன் மீதான குற்றச்சாட்டை இம்ரான் கான் நிராகரித்துள்ளார்.