பாகிஸ்தான் கைபர் பக்துன்வா மாகாணத்தில் அரசியல் கட்சியொன்றின் கூட்டத்தில் ஞாயிற்றுக்கிழமை இடம்பெற்ற குண்டு வெடிப்பில் உயிரிழந்தோர் எண்ணிக்கை 44 ஆக அதிகரித்துள்ளது.
ஜமியத் உலமா-இ -இஸ்லாம் பசல் என்ற அரசியல் கட்சி அந்த கூட்டத்தை நடத்தியிருந்தது.
அதன்போது அங்கு குண்டு வெடித்த நிலையில் ஆரம்பத்தில் அவ்விடத்தில் அரசியல் கட்சி முக்கியஸ்தர்கள் உள்ளிட்ட 30 பேர் வரையில் உயிரிழந்திருந்தனர்.
இதேவேளை நூற்றுக்கும் மேற்பட்டோர் படுகாயமடைந்த நிலையில் அருகிலுள்ள மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த நிலையில் அவர்களில் 14 பேர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளதாக அந்நாட்டு செய்திகள் தெரிவிக்கின்றன.
இந்நிலையில் குண்டு வெடிப்பில் பலியானோர் எண்ணிக்கை மேலும் அதிகரிக்கலாம் என்று அஞ்சப்படுகின்து.
இதுவொரு தற்கொலை குண்டு தாக்குதலாக இருக்கலாம் என்று கூறப்படும் நிலையில், தாக்குதல் நடத்திய தரப்பினர் தொடர்பில் விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.