January 18, 2025

Tamil Avani News

மெய்ப்பொருள் காண்பது அறிவு

அரிசி தட்டுப்பாடு ஏற்படுமா?

இந்தியாவில் இருந்து ஏற்றுமதி செய்யப்படும் வெள்ளை அரிசி ஏற்றுமதி நிறுத்தப்பட்டுள்ளதால் அமெரிக்காவில் அரிசி தட்டுப்பாடு ஏற்படும் அபாயம் ஏற்பட்டுள்ளதாக சர்வதேச செய்திகள் தெரிவிக்கின்றன.

உள்நாட்டு பாவனைக்கான அரிசி இருப்பை பாதுகாக்கும் நோக்கில் இந்திய அரசாங்கம் கடந்த வாரம் முதல் பாஸ்மதி அல்லாத வெள்ளை அரிசி ஏற்றுமதிகளை நிறுத்த முடிவு செய்துள்ளது.

இதனால் அரசி இறக்குமதிக்காக இந்தியாவை அதிகளவில் நம்பியிருக்கும் அமெரிக்கா பெரும் பாதிப்பை எதிர்கொண்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

இந்தியாவின் இந்த தீர்மானத்தை தொடர்ந்து அமெரிக்கா முழுவதும் அரிசி கொள்முதல் மற்றும் சேமிப்பு வழக்கத்திற்கு மாறாக அதிகரித்துள்ளதாகவும், இந்நிலையால் அரிசி விலையும் அதிகரித்துள்ளதாகவும் அந்நாட்டு செய்திகள் தெரிவிக்கின்றன.

சூப்பர் மார்க்கெட்டுகளில் அரிசி வாங்க மக்கள் குவிந்த வண்ணம் உள்ளனர். இதனால் அமெரிக்காவில் பல இடங்களில் அரிசி விற்பனையில் கட்டுப்பாடுகள் கொண்டுவரவும் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளன.

இதேவேளை, இந்தியாவின் அரிசி ஏற்றுமதி தடையால் துருக்கி, சிரியா, பாகிஸ்தான் ஆகிய நாடுகளும் பாதிப்பை எதிர்நோக்கியுள்ளன.