January 18, 2025

Tamil Avani News

மெய்ப்பொருள் காண்பது அறிவு

50 வருடங்களின் பின்னர் சந்திரனுக்கு பயணமாகும் நான்கு பேர்!

Photo: nasa.gov

50 வருடங்களுக்கு பின்னர் முதற்தடவையாக சந்திரனுக்கு அனுப்பப்படவுள்ள விண்வெளி வீரர்களின் பெயர்களை நாசா நிறுவனம் நிறுவனம் வெளியிட்டுள்ளது.

நான்கு பேரின் பெயர்களை இவ்வாறாக அறிவித்துள்ள நாசா நிறுவனம், 2025 ஆம் ஆண்டின் ஆரம்பத்தில் இவர்கள் சந்திரனுக்கு பயணிக்கவுள்ளதாக தெரிவித்துள்ளது.

இவ்வாறாக சந்திரனுக்கு செல்லவுள்ள விண்வெளி வீரர்களிடையே பெண்ணொருவரும் கறுப்பினத்தவர் ஒருவரும் உள்ளடங்குகின்றனர்.

இதன்படி, கிறிஸ்டினா கோச் என்பவர் நிலவிற்கு பயணிக்கவுள்ள முதலாவது பெண் விண்வெளி வீராங்கனையாக பதிவாகவுள்ளார்.

இதேவேளை முதலாவது கறுப்பின விண்வெளி வீரராக விக்டர் குளோவர் பயணிக்கவுள்ளார்.

ரீட் வைஸ்மேன், ஜெர்மி ஹேன்சன் ஆகிய விண்வெளி வீரர்களும் இவர்களிடையே உள்ளனர்.