துருக்கி மற்றும் சிரியாவில் இம்மாதம் 6ஆம் திகதி ஏற்பட்ட நிலநடுக்கத்தில் உயிரிழந்தோர் எண்ணிக்கை 50 ஆயிரத்தை கடந்துள்ளது.
இதுவரையில் துருக்கியில் 44,210 பேரும், சிரியாவில் 6,760 பேரும் உயிரிழந்துள்ளமை உறுதிப்படுத்தப்பட்டுள்ளதாக சர்வதேச செய்திகள் தெரிவிக்கின்றன.
இதேவேளை இரு நாடுகளிலும் சுமாா் 122,500 போ் காயமடைந்துள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
எவ்வாறாயினும் கட்டட இடிபாடுகளுக்குள் இருந்து தொடர்ந்தும் சடலங்கள் மீட்கப்படுகின்றன. மீட்புக் குழுவினர் தொடர்ந்தும் அங்கு பணிகளில் ஈடுபட்டுள்ளனர்.
6ஆம் திகதி காலை 7.8 ரிக்டா் அளவில் நிலநடுக்கம் ஏற்பட்டது. இதன்போது துருக்கி மற்றும் சிரியாவில் பெருளமளவான கட்டடங்கள் இடிந்து விழுந்தன. அதனை தொடர்ந்தும் அங்கு அடிக்கடி நில அதிர்வுகள் பதிவாகி வருகின்றதாக சர்வதேச செய்திகள் தெரிவிக்கின்றன.