April 16, 2025 20:48:29

Tamil Avani News

மெய்ப்பொருள் காண்பது அறிவு

லாஸ் ஏஞ்சல்ஸ் நகரில் துப்பாக்கிச் சூடு: 10 பேர் மரணம்!

அமெரிக்காவின் கலிபோர்னியா மாகாணம் லாஸ் ஏஞ்சல்ஸ் நகரில் நடந்த துப்பாக்கிச் சூட்டில் 10 பேர் உயிரிழந்துள்ளனர்.

லாஸ் ஏஞ்சல்ஸ் நகரின் மாண்டெரி பார்க் பகுதியில் உள்ள கேளிக்கை விடுதியொன்றிலேயே இந்த துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

குறித்த விடுதியில் பெருந்திரளாவர்கள் ஞாயிற்றுக்கிழமை அதிகாலை சீன புத்தாண்டு கொண்டாட்டங்களில் ஈடுபட்டிருந்த போது, அங்கு வந்த மர்ம நபர்கள் துப்பாக்கிச் சூட்டை நடத்தியுள்ளதாக லாஸ் ஏஞ்சல்ஸ் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

இந்த சம்பவத்தில் 10 பேர் உயிரிழந்துள்ளதுடன், பலர் காயமடைந்துள்ளதாக கூறப்படுகின்றது.

சம்பவத்துடன் தொடர்புடைய துப்பாக்கிதாரிகளை கண்டுபிடிப்பதற்காக அந்தப் பகுதியில் விசேட தேடுதல் நடவடிக்கைகளில் பொலிஸார் ஈடுபட்டுள்ளனர்.