
அமெரிக்காவில் கடந்த நாட்களாக கடும் பனிப் புயல் வீசி வருவதால் அங்குள்ள மக்கள் பெரும் அவதிக்கு உள்ளாகியுள்ளனர்.
வீடுகள், கட்டடங்கள், வாகனங்கள் பனிப் பொழிவில் மூழ்கியுள்ளன.
இதேவேளை பல மாநிலங்களில் மின்சாரம் தடைபட்டுள்ளதுடன் விமானம், ரயில் போக்குவரத்துகளும் நிறுத்தப்பட்டுள்ளன.
இந்நிலையில் கடுமையான பனிப்பொழிவு காரணமாக நயாகரா நீர்வீழ்ச்சியின் ஒரு பகுதியும் உறைந்து போயுள்ளது. சில இடங்களில் மட்டும், நீர்வீழ்ச்சியில் உள்ள பனிக்கட்டிகளையும் தாண்டி தண்ணீர் கொட்டும் காட்சிகளும், வீடியோக்களும் சமூக வலைத்தளங்களில் வெளியாகியுள்ளன.