
பிரான்ஸ் ஜனாதிபதியின் கருத்தினை தொடர்ந்து தீவிரவாதிகளின் தாக்குதல் ஆபத்து அதிகரித்துள்ளதாக எச்சரித்துள்ள ஐக்கிய நாடுகளின் அச்சுறுத்தல்கள் மற்றும் பாதுகாப்பு முகவர் அமைப்பு, குறிப்பாக தனிநபர் தாக்குதல் ஆபத்து அதிகம் எனவும் தெரிவித்துள்ளது.
ஐக்கிய நாடுகள் முகவர் அமைப்பின் பாங்கொக் அலுவலகம் இந்த எச்சரிக்கையை விடுத்துள்ளது.
ஐக்கிய நாடுகளின் அதிகாரிகள் குறிப்பாக பிரான்ஸை சேர்ந்தவர்கள் எதிர்வரும் நாட்களில் எச்சரிக்கையுடன் இருக்கவேண்டும் என்றும் குறிப்பாக தங்களின் சுற்றுப்பகுதிகள் குறித்து விழிப்புடன் இருக்கவேண்டும் எனவும் அந்த அமைப்பு வேண்டுகோள் விடுத்துள்ளது.
பிரான்ஸ் ஜனாதிபதியின் கருத்தினை தொடர்ந்து மேற்குலகிற்கு எதிரான பிரான்ஸுக்கு எதிரான கருத்துக்கள் ஆசிய பசுபிக் நாடுகள் மற்றும் முஸ்லீம் நாடுகளில் வெளியாகியுள்ளது.இதனால் ஆபத்தான சக்திகள் தங்களுக்கு கிடைக்கக்கூடிய சிறிய வாய்ப்பினையும் பயன்படுத்துவதற்கு தவறப்போவதில்லை எனவும் பிரான்ஸுடன் தொடர்புடைய அமைப்புகள், ஸ்தாபனங்கள், கல்வி நிறுவனங்கள் என கருதப்படுபவையும் தாக்கப்படலாம் எனவும் அந்த அமைப்பு எச்சரித்துள்ளது.