January 19, 2025

Tamil Avani News

மெய்ப்பொருள் காண்பது அறிவு

அமெரிக்க ஜனாதிபதி தேர்தல்; தீவிரமான இறுதிநேர பிரசாரத்தில் இரு வேட்பாளர்களும்

அமெரிக்க வாக்காளர்களில் இன்னமும் தமது ஆதரவு யாருக்கு என்பதை தீர்மானிக்காமல் இருக்கும் வாக்காளர்களை தமது பக்கத்திற்கு திருப்புவதற்கான இறுதி கட்ட முயற்சியில் ஜனாதிபதி டொனால்ட் டிரம்பும் ஜனநாய கட்சியின் வேட்பாளர் ஜோ பைடனும் ஈடுபட்டுள்ளனர்.

கடும் போட்டி நிலவலாம் என கருத்துக்கணிப்புகள் தெரிவித்துள்ள நிலையிலேயே இரு வேட்பாளர்களும் வாக்காளர்களை கவருவதற்கான இறுதி முயற்சிகளை மேற்கொண்டுள்ளனர்.

74 வயது ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் ஞாயிற்றுக்கிழமையும் இன்றும் மிச்சிக்கன், நோர்த் கரோலினா, ஜோர்ஜியா, புளோரிடா உட்பட பல பகுதிகளில் பிரசாரங்களை மேற்கொண்டுள்ளார்.அதேபோல்,ஜனநாயக கட்சியின் வேட்பாளர் ஜோ பைடன் பென்சில்வேனியாவில் பிரசாரத்தை மேற்கொண்டுள்ளார்.

டிரம்ப் நான்கு வருடங்களிற்கு முன்னர் வெற்றி பெற்ற விஸ்கொன்சின், பென்சில்வேனியா போன்ற பகுதிகளில் தீவிர பிரசாரத்தை மேற்கொள்வதற்கு டிரம்பின் பிரச்சார குழுவினர் திட்டமிட்டுள்ளனர்.

இரு வேட்பாளர்களும் இந்த வருட தேர்தலில் தாக்கத்தை வகிப்பார்கள் என கருதக்கூடிய இந்திய வம்சாவளியினரை இலக்கு வைத்து இறுதி நேர பிரசாரங்களை தீவிரப்படுத்தியுள்ளனர்.