
Photo: Twitter/ anwaribrahim
மலேசியாவின் புதிய பிரதமராக அன்வார் இப்ராகிம் பதவியேற்க உள்ளார்.
மலேசிய மன்னர் அரண்மனை இது தொடர்பில் அறிவித்துள்ளது.
இதற்கமைய அன்வார் இப்ராகிம், நாட்டின் 10 ஆவது பிரதமராக இன்று மாலை பதவியேற்கவுள்ளது.
இந்த அறிவிப்பின் மூலம் கடந்த நாட்களாக மலேசியாவில் நீடித்து வந்த அரசியல் குழப்பம் முடிவுக்கு வரவுள்ளது.
மலேசியாவின் 15ஆவது பொதுத்தேர்தல் கடந்த 19ஆம் தேதி நடைபெற்றது. இதில் எந்தவொரு கட்சியோ, கூட்டணியோ ஆட்சியமைக்கும் வகையில் தனிப் பெரும்பான்மையை பெற்றுக்கொள்ளவில்லை.
தேர்தலில் அன்வார் இப்ராகிம் தலைமையிலான ‘பக்காத்தான் ஹராப்பான்’ கூட்டணி, மொஹைதின் யாசின் தலைமையிலான ‘பெரிக்கத்தான் நேசனல்’, இடைக்கால பிரதமர் இஸ்மாயில் சப்ரி யாகூப் சார்ந்துள்ள அம்னோ கட்சி இடம்பெற்றிருக்கும் ‘பாரிசான் நேசனல் உள்ளிட்ட கட்சிகள் போட்டியிட்டன.
இதில் எந்தக் கட்சியும் ஆட்சியமைக்க தேவையான பெரும்பான்மை ஆசனங்களை பெற்றுக்கொள்ளாத காரணத்தினால் பிரதமர் பதவி தொடர்பில் குழப்ப நிலைமை நீடித்து வந்த நிலையில், மன்னர் அரண்மனை புதிய பிரதமர் தொடர்பான அறிவித்தலை இன்று காலை உத்தியோகபூர்வமாக அறிவித்துள்ளது.