March 3, 2025

Tamil Avani News

மெய்ப்பொருள் காண்பது அறிவு

சந்திரனுக்கு மனிதர்களை அனுப்பும் நாசாவின் விண்கல பரிசோதனை!

Photo: Twitter/ NASA HQ PHOTO

சந்திரனுக்கு மனிதனை அனுப்பும் ‘ஆர்ட்டெமிஸ்-1’ திட்டத்தின் விண்கலம் அமெரிக்க விண்வெளி ஆராய்ச்சி மையமான நாசாவால் இன்று வெற்றிகரமாக சோதனை செய்யப்பட்டது.

அமெரிக்காவின் புளோரிடா மாகாணத்தில் உள்ள கென்னெடி விண்வெளி மையத்தில் இருந்து விண்கலம் விண்ணுக்கு ஏவப்பட்டு சோதனை செய்யப்பட்டது.

சந்திரனுக்கு மனிதர்களை அனுப்பி அவர்களை நீண்ட காலத்திற்கு அங்கே தங்க வைத்து ஆய்வு செய்யும் நோக்கில் ஆர்ட்டெமிஸ் என்ற திட்டத்தை நாசா ஆரம்பித்துள்ளது.

இந்த திட்டத்தின் மூலம் 2025 ஆம் ஆண்டளவில் மனிதர்களை சந்திரனுக்கு அனுப்ப நாசா திட்டமிட்டுள்ளது.

இதன்படி 1972 ஆம் ஆண்டுக்குப் பின்னர் முதன்முறையாக சந்திரனில் மனிதர்கள் காலடி வைப்பார்கள் என்று எதிர்பார்க்கப்படுகின்றது.

இதற்கமைய ‘ஆர்டெமிஸ் – 1’ என்ற மனிதர்கள் இல்லாத பரிசோதனை விண்கலத்தை இன்று நாசா வெற்றிகரமாக விண்ணில் ஏவியது.