May 29, 2025 15:38:56

Tamil Avani News

மெய்ப்பொருள் காண்பது அறிவு

இம்ரான் கான் மீது துப்பாக்கிசூடு!

பாகிஸ்தானின் முன்னாள் பிரதமர் இம்ரான் கான் மீது துப்பாக்கிசூடு நடத்தப்பட்டுள்ளது.

பாகிஸ்தானில் பேரணி நடத்தி வரும் அந்நாட்டின் முன்னாள் பிரதமர் இதில் அவரது வலது காலில் காயம் ஏற்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.

லாகூரில் பேரணியொன்றில் கலந்துகொண்டிருந்த போது இந்த துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டுள்ளதாகக தெரிவிக்கப்படுகின்றது.
இதன்போது இம்ரான் கானின் வலது காலில் காயம் ஏற்பட்டுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் தெரிவித்துள்ளன.

பிரதமராக கடந்த 4 ஆண்டுகளுக்கும் மேலாக இருந்து வந்த இம்ரான் கான், எதிர்க்கட்சியின் நம்பிக்கையில்லா பிரேரணை மூலம் கடந்த மாதம் பதவி இழந்தார்.

இதையடுத்து புதிய பிரதமராக ஷெபாஸ் ஷெரீப் பதவியேற்றுள்ளார்.
இந்நிலையில் நாட்டின் உண்மையான சுதந்திரத்திற்கான போராட்டம் என்ற பெயரில், அவரின் கட்சி ஆதரவாளர்களுடன் இம்ரான் கான் லாகூரில் உள்ள லிபர்ட்டி சவுக்கிலிருந்து இஸ்லாமாபாத் நோக்கி பேரணியை நடத்திய போது அவர் மீது துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டுள்ளது.

இதனை தொடர்ந்து அவர் மருத்துமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.