சோமாலியா தலைநகர் மொகாடிஸ்ஹூவில் சனிக்கிழமை இரவு நடந்த இரட்டை கார் வெடிகுண்டு தாக்குதல்களில் குறைந்தது 100 பேர் உயிரிழந்துள்ளதாக அந்நாட்டு ஜனாதிபதி ஹஸ்ஸன் ஷேக் தெரிவித்துள்ளார்.
மொகாடிஸ்ஹூவில் உள்ள கல்வி அமைச்சு கட்டடத்திற்கு முன்னால் இந்த குண்டு வெடிப்புகள் இடம்பெற்றுள்ளன.
முதலில் அங்கு கார் ஒன்றில் இருந்த வெடிப்பொருட்கள் வெடித்துள்ளன. இதன்போது அவ்விடத்தில் இருந்த பலர் உயிழந்துள்ளனர்.
பின்னர் அவ்விடத்தில் மீட்பு நடவடிக்கையில் ஈடுபட்டிருந்த போது இன்னுமொரு காரில் இருந்த வெடிபொருட்கள் வெடித்துள்ளதாக கூறப்படுகின்றது.
இந்த தாக்குதல்களில் குழந்தைகள், பெண்கள், மாணவர்கள் என பலரும் உயிரிழந்துள்ளதாக அந்நாட்டு ஜனாதிபதி கூறியுள்ளார்.
எனினும் இந்த தாக்குதல்களுக்கான காரணங்களோ, தாக்குதலை நடத்திய குழு யாரென்ற தகவல்களோ வெளியாகவில்லைல.
எனினும் பயங்கரவாத செயற்பாடுகளுடன் தொடர்புடைய அல் ஷபாப் என்ற அமைப்பு இந்த தாக்குதலின் பின்னணியில் இருக்கக்கூடும் என ஜனாதிபதி ஹஸ்ஸன் ஷேக் சந்தேகம் வெளியிட்டுள்ளார்.