பிரிட்டன் பிரதமர் லிஸ் டிரஸ் பதவியை இராஜினாமா செய்துள்ளார்.
பிரதமராக பதவியேற்று 45 நாட்களில் லிஸ் டிரஸ் பதவி விலகுவதாக இன்று அறிவித்துள்ளார்.
உள்துறை அமைச்சர் நேற்று பதவியை இராஜினாமா செய்த நிலையில், பிரதமர் இன்று இராஜினாமா தொடர்பில் அறிவித்துள்ளார்.
இதுவரை எந்த பிரிட்டன் பிரதமரும் இவ்வளவு குறுகிய காலத்தில் பதவி விலகியதில்லை.
தற்போதைய பொருளாதார நெருக்கடிக்கு மத்தியில் அரசாங்கத்தின் மீது மக்கள் விமர்சனங்களை முன்வைக்கும் நிலையில், டௌனிங் சாலையில் உள்ள பிரதமர் அலுவலகத்துக்கு வெளியே தனது பதவி விலகல் குறித்து அறிவித்த லிஸ் டிரஸ், தான் கன்சர்வேட்டிவ் கட்சி தலைவர் பொறுப்பில் இருந்து விலகுவதாகவும் தெரிவித்துள்ளார்.
கன்சர்வேட்டிவ் கட்சிக்கு ஆட்சியில் தொடர உரிமை இல்லை என்றும், உடனடியாக பொதுத் தேர்தல் நடத்தப்படவேண்டும் என்றும் எதிர்க்கட்சியான தொழிலாளர் கட்சித் தலைவர் சர் கெய்ர் ஸ்டார்மர் கூறியுள்ளார்.