January 19, 2025

Tamil Avani News

மெய்ப்பொருள் காண்பது அறிவு

தாய்லாந்து சிறுவர் பராமரிப்பு நிலையமொன்றில் துப்பாக்கிச் சூடு: பலர் பலி!

தாய்லாந்தின் வடகிழக்கு மாகாணத்தில் சிறுவர் பராமரிப்பு நிலையமொன்றில் நடத்தப்பட்ட துப்பாக்கிச் சூட்டு சம்பவத்தில் சிறுவர்கள் உள்ளிட்ட 34 பேர் உயிரிழந்துள்ளதாக சர்வதேச செய்திகள் தெரிவிக்கின்றன.

இதேவேளை பலர் காயமடைந்துள்ளதுடன், அவர்கள் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

குறித்த சிறுவர் பராமரிப்பு நிலையத்திற்குள் துப்பாக்கியுடன் நுழைந்த மர்ம நபர் அங்கிருந்தவர்கள் மீது சரமாரியாக துப்பாக்கிச் சூட்டை நடத்தியுள்ளதாக கூறப்படுகின்றது.

குறித்த நபர் அங்கிருந்து தப்பிச் சென்றுள்ளதாகவும், அவர் முன்னாள் பொலிஸ் அதிகாரி என்று விசாரணைகளில் தெரியவந்துள்ளதாகவும் தாய்லாந்து பாதுகாப்பு தரப்பினரை ஆதாரம் காட்டி சர்வதேச செய்திகள் வெளியாகியுள்ளன.