January 19, 2025

Tamil Avani News

மெய்ப்பொருள் காண்பது அறிவு

வேதியியலுக்கான நோபல் பரிசு மூவருக்கு பகிர்ந்தளிப்பு!

2022 ஆம் ஆண்டின் வேதியியலுக்கான நோபல் பரிசு மூன்று விஞ்ஞானிகளுக்குப் பகிர்ந்தளிக்கப்படுவதாக நோபல் தேர்வுக்குழு அறிவித்துள்ளது.

அமெரிக்காவை சேர்ந்த கரோலின் ஆர். பெர்டோஸி, டென்மார்க்கை சேர்ந்த மோர்டன் மெல்டல் மற்றும் அமெரிக்காவின் கே. பாரி ஷார்ப்லெஸ் ஆகியோருக்கு இவ்வாறு வேதியியலுக்கான நோபல் பரிசு அறிவிக்கப்பட்டுள்ளது.

‘கிளிக் கெமிஸ்ட்ரி மற்றும் பயோ ஆர்த்தோகனல் கெமிஸ்ட்ரி’ வளர்ச்சிக்காக இவர்களுக்கு நோபல் பரிசு வழங்கப்படுகின்றது.

ஒவ்வொரு ஆண்டும் மருத்துவம், இயற்பியல், வேதியியல், பொருளாதாரம், அமைதி, இலக்கியம் ஆகிய துறைகளில் சாதனை படைத்தவர்களுக்கு நோபல் பரிசு வழங்கப்படுகிறது.

அந்த வகையில் 2022 ஆம் ஆண்டுக்கான நோபல் பரிசுகள் ஸ்டோக்ஹோமில் திங்கட்கிழமை முதல் அறிவிக்கப்பட்டு வருகின்றன.