November 25, 2024

Tamil Avani News

மெய்ப்பொருள் காண்பது அறிவு

இயற்பியலுக்கான நோபல் பரிசு மூவருக்கு அறிவிக்கப்பட்டது!

2022 ஆம் ஆண்டின் இயற்பியலுக்கான நோபல் பரிசு மூவருக்கு அறிவிக்கப்பட்டுள்ளது.

அலைன் ஆஸ்பெக்ட், ஜான் எப். கிளாசர், அன்டன் ஜெய்லிஙர் ஆகிய மூவருக்கும் குவாண்டம் தகவல் அறிவியல் தொடர்பான ஆராய்ச்சிக்காக அறிவிக்கப்பட்டுள்ளது.

ஒவ்வொரு ஆண்டும் மருத்துவம், இயற்பியல், வேதியியல், பொருளாதாரம், அமைதி, இலக்கியம் ஆகிய துறைகளில் சாதனை படைத்தவர்களுக்கு நோபல் பரிசு வழங்கப்படுகிறது.

அந்த வகையில் 2022 ஆம் ஆண்டுக்கான நோபல் பரிசுகள் ஸ்டோக்ஹோமில் நேற்று முதல் அறிவிக்கப்பட்டு வருகின்றன.

அதில் முதலாவதாக மருத்துவத் துறைக்கான நோபல் பரிசு விஞ்ஞானி ஸ்வான்டே பாபோவுக்கு அறிவிக்கப்பட்டது.

அதனை தொடர்ந்து இன்றைய தினம் இயற்பியலுக்கான நோபல் பரிசு அறிவிக்கப்பட்டது.