இந்தோனேசியாவின் கால்பந்து மைதானமொன்றில் இடம்பெற்ற மோதல் மற்றும் கூட்ட நெரிசலில் சிக்கி குறைந்தது 127 பேர் உயிரிழந்துள்ளனர்.
இந்தோனேசியா கிழக்கு ஜாவா பகுதியில் கஞ்சுருஹான் மைதானத்தில் நடந்த கால்பந்து போட்டியொன்றின் பின்னரே இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளதாக சர்வதேச செய்திகள் தெரிவிக்கின்றன.
அரேமா எப்.சி – பெர்சேபயா சுராபயா ஆகிய அணிகள் இந்தப் போட்டியில் விளையாடியுள்ளன.
இதன்போது அரேமா எப்.சி அணி, அவர்களின் பரம எதிராளி அணியான பெர்சேபயா சுராபயா அணியிடம் தோல்வி அடைந்த பின்னர், ரசிகர்கள் ஒருவரை ஒருவர் தாக்கிக் கொண்டுள்ளனர்.
இவ்வேளையில் அங்கு ஏற்பட்ட அமைதின்மை நிலைமையை கட்டுப்படுத்த பொலிஸார் கண்ணீர்ப் புகை பிரயோகங்களை மேற்கொண்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
இதன்போது மோதல்களிலும், கூட்ட நெரிசல்களிலும் சிக்கி 127 பேர் உயிரிழந்துள்ளதுடன், 180ற்கும் மேற்பட்டோர் காயமடைந்துள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளன.
உலகளவில் விளையாட்டு மைதானங்களில் நடந்த மிகவும் மோசமான சம்பவமாக இது அமைந்துள்ளதாக சர்வதேச ஊடகங்கள் தெரிவித்துள்ளன.