January 21, 2025

Tamil Avani News

மெய்ப்பொருள் காண்பது அறிவு

முன்னாள் ஜனாதிபதிக்கு எதிராக ஊழல் வழக்கு!

அமெரிக்கவின் முன்னாள் ஜனாதிபதி டொனால்ட் டிரம்பிற்கு எதிராக அந்நாட்டு நீதிமன்றத்தில் ஊழல் மோசடி வழக்குத் தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

இந்த வழக்கில் அவரின் 3 பிள்ளைகளும் பிரதிவாதிகளாக குறிப்பிடப்பட்டுள்ளனர்.

‘டிரம்ப் அமைப்பு’ மீதான விசாரணைகளை தொடர்ந்தே  அவர்களுக்கு எதிராக வழக்குத் தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

கடன் பெறுவதற்கும் குறைந்த வரி வருமானத்தை செலுத்துவதற்கும் தமது வியாபாரத்தின் மதிப்பு குறித்து பொய்யான தகவல்களை வழங்கியுள்ளதாக அவர்கள் மீது குற்றச்சாட்டுகள் முன்வைக்கப்பட்டுள்ளன.

2011 முதல் 2021ஆம் ஆண்டு வரையான காலப்பகுதியில் டிரம்ப் அமைப்பு, ஏராளமான மோசடி செயல்களை செய்ததாக சட்டத்தரணிகள் தெரிவித்துள்ளனர்.

எனினும் தன்மீதும் மற்றும் தமது குடும்பத்தினர் மீதும் முன்வைக்கப்படும் குறித்த குற்றச்சாட்டுகளை டிரம்ப் முழுமையாக நிராகரித்துள்ளார்.