January 19, 2025

Tamil Avani News

மெய்ப்பொருள் காண்பது அறிவு

மகாராணியின் இறுதிச் சடங்கு: புகைப்படத் தொகுப்பு!

மறைந்த மகாராணி இரண்டாம் எலிசபெத்தின் இறுதிச் சடங்கு பூரண அரச மரியாதையுடன் இன்று நடைபெற்றது.

கடந்த தினங்களாக வெஸ்ட்மின்ஸ்டர் அரங்கில் மக்கள் அஞ்சலிக்காக வைக்கப்பட்டிருந்த மகாராணியின் உடல், இன்று வெஸ்ட்மின்ஸ்டர் அபேக்கு கொண்டு செல்லப்பட்டு, அங்கு நடைபெற்ற ஜெபக் கூட்டத்தை தொடர்ந்து, விண்ட்சர் கோட்டையில் உள்ள கல்லறையில் அடக்கம் செய்யப்பட்டது.

புதிய அரசர் சார்ல்ஸ், அவரது மகன்கள் இளவரசர் வில்லியம், இளவரசர் ஹரி உள்ளிட்ட அரச குடும்பத்தின் உறுப்பினர்கள் இந்த நிகழ்வில் கலந்துகொண்டிருந்தனர்.

இதேவேளை மகாராணியின் இறுதிச் சடங்கு நிகழ்வில் அமெரிக்க அதிபர் ஜோ பைடன், இந்திய குடியரசு தலைவர் திரெளபதி முர்மூ, பிரான்ஸ் அதிபர் எமானுவேல் மக்ரோங் உள்ளிட்ட உலக தலைவர்கள் பலரும் பங்கேற்றனர்.

This slideshow requires JavaScript.