மறைந்த இரண்டாம் எலிசபெத் மகாராணியின் இறுதிச் சடங்கு இன்று நடைபெறவுள்ளது.
பிரிட்டனின் வெஸ்ட்மின்ஸ்டர் அபே தேவஸ்தானத்தில் இறுதிச் சடங்குகளுக்கான ஏற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.
அதன்படி, மகாராணிக்கு இறுதி அஞ்சலி செலுத்துவதற்காக நாட்டு மக்களுக்கு இன்று உள்ளூர் நேரப்படி காலை 6.30 மணி வரையில் கால அவகாசம் வழங்கப்பட்டுள்ளது.
இதனை தொடர்ந்து முற்பகல் 10.44 மணிக்கு மகாராணியின் உடல் வெஸ்ட்மின்ஸ்டர் அபேக்கு எடுத்துச் செல்லப்படவுள்ளது.
இதன்போது 100ற்கும் மேற்பட்ட நாடுகளின் தலைவர்கள் நிகழ்வில் கலந்துகொள்ளவுள்ளனர்.
இதேவேளை மன்னர் மூன்றாம் சார்லஸ் மற்றும் இளவரசர் வில்லியம் ஆகியோர் மகராணிக்கு இறுதி அஞ்சலி செலுத்த காத்திருக்கும் மக்களை நேற்று சந்தித்தனர்.