January 19, 2025

Tamil Avani News

மெய்ப்பொருள் காண்பது அறிவு

பிரிட்டனின் புதிய அரசராக மூன்றாம் சார்லஸ்!

File Photo

இரண்டாம் எலிசபெத் மகாராணி காலமானதை தொடர்ந்து பிரிட்டனின் புதிய அரசராக 3 ஆம் சார்லஸ் பதவியேற்கவுள்ளார்.

ஸ்காட்லாந்தில் உள்ள பால்மொரல் பண்ணை வீட்டில்  மகாராணி இரண்டாம் எலிசபெத், வியாழக்கிழமை காலமானார்.

இதனையடுத்து வேல்ஸின் முன்னாள் இளவரசர் சார்ல்ஸுக்கு அரசருக்குரிய அரியணை சம்பிரதாயப்படி கிடைக்கின்றது.

73 வயதுடைய சார்லஸ் பிலிப் அர்துர் ஜோர்ஜ் என்ற இயற்பெயர் கொண்ட 3 ஆம் சார்லஸ், காலமான 2 ஆம் எலிசபெத் மகாராணியின் மூத்த மகன் ஆவார்.

இவர் அரசராக அரியணை ஏறும் விழா விரைவில் நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

தனது முதல் மனைவியான இளவரசி டயானாவை 1996 ஆம் ஆண்டில் சார்ல்ஸ் விவாகரத்து செய்திருந்தார். இதனை தொடர்ந்து 1997 ஆம் ஆண்டில் டயனா விபத்தொன்றில் உயிரிழந்திருந்தார்.

இதனையடுத்து 2005 ஆம் ஆண்டு கமிலா என்பவரை சார்லஸ் இரண்டாவது திருமணம் செய்துகொண்டார்.