பிரிட்டனின் புதிய பிரதமராக லிஸ் டிரஸ் தெரிவாகியுள்ளார்.
பிரதமர் பதவியில் இருந்து போரிஸ் ஜோன்சன் விலகியதை தொடர்ந்து, ஆளும் கன்சர்வேட்டிவ் கட்சியின் புதிய தலைவரை தேர்வு செய்வதற்கான தேர்தல் கடந்த 2 ஆம் திகதி நடைபெற்றது.
தேர்தலில் முன்னாள் நிதி அமைச்சர் ரிஷி சுனக்குக்கும், வெளியுறவு அமைச்சர் லிஸ் டிரஸ்சுக்கும் இடையே கடும் போட்டி நிலவியது.
சுமார் 1.60 லட்சம் பேர் கட்சியின் புதிய தலைவரை தெரிவு செய்வதற்கான வாக்கெடுப்பில் கலந்துகொண்டிருந்தனர்.
தற்போது வாக்கு எண்ணிக்கை முடிவடைந்துள்ள நிலையில், தேர்தலில் லிஸ் டிரஸ் வெற்றி பெற்றுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
இதன்படி, ஆளும் கட்சியின் தலைவராக தேர்வு செய்யப்பட்டுள்ள லிஸ் டிரஸ், நாட்டின் பிரதமராக பதவியேற்கவுள்ளார்.