ஆப்கானிஸ்தானின் ஹெராட் மாகாணத்தில் உள்ள பள்ளிவாசலொன்றில் இன்று இடம்பெற்ற குண்டு வெடிப்பில் 18 பேர் உயிரிழந்துள்ளனர்.
இந்த சம்பவத்தில் உயிரிழந்தவர்களிடையே உயர்மட்ட தலிபான் சார்பு மதகுரு ஒருவரும் அடங்குவதாகவும் ஆப்கான் செய்திகள் தெரிவிக்கின்றன.
இதேவேளை குண்டு வெடிப்பில் 20க்கும் மேற்பட்டோர் காயமடைந்துள்ளதாகவும், அவர்கள் மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
எனினும் இந்த தாக்குதலுக்கு எந்தக் குழுவும் இதுவரை பொறுப்பேற்கவில்லை என்றும் அந்நாட்டு ஊடகங்கள் கூறியுள்ளன.
ஆப்கானிஸ்தானில் இருந்து அமெரிக்கப் படைகள் வெளியேறியதை தொடர்ந்து, 2021 ஆகஸ்ட் 15 ஆம் திகதி தலிபான்கள் ஆட்சியைக் கைப்பற்றினர்.
இதனையடுத்து தலிபான்கள் தங்களது ஆதிக்கத்தை செலுத்தும்விதமாக தாக்குதல் நடத்தி பெரும்பாலான மாகாணங்களை தங்கள் கட்டுக்குள் கொண்டு வந்தனர்.
இந்நிலையில் அங்கு பல்வேறு பகுதிகளில் தொடர்ச்சியாக கடந்த சில மாதங்களாக குண்டு வெடிப்பு சம்பவங்கள் பதிவாகி வருகின்றன.