January 19, 2025

Tamil Avani News

மெய்ப்பொருள் காண்பது அறிவு

பாகிஸ்தான் வெள்ளத்தில் ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் பலி!

பாகிஸ்தானில் ஏற்பட்ட கடும் வெள்ளத்தில் சிக்கி ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர்.

தென்மேற்கு பருவ மழைக்காலம் தொடங்கிய நிலையில் கடந்த 3 மாதங்களாக அங்கு கனமழை பெய்து வருகின்றது.

இந்நிலையில் கடந்த தினங்களில் பல மாட்டங்களிலும் கடும் வெள்ள நிலைமை ஏற்பட்டுள்ளன.

இதில் சுமார் 3.30 கோடி மக்கள் பாதிக்கப்பட்டுள்ளனர் என்று அந்நாட்டு செய்திகள் தெரிவிக்கின்றன. இதேவேளை சுமார் 57 லட்சம் பேர் வீடுகளை இழந்துள்ளதாகவும் செய்திகள் வெளியாகியுள்ளன.

நாடு முழுவதும் மழை, வெள்ள பாதிப்புகளை சமாளிக்கும் வகையில் அவசர நிலையை பிரகடனப்படுத்தி, அந்நாட்டு அரசாங்கம் மீட்பு நடவடிக்கைகளை துரிதப்படுத்தி வருகிறது.

இந்த நிலையில், ஐ.நா.வின் மனிதநேய விவகாரங்களுக்கான ஒருங்கிணைப்பு அலுவலகம் வெளியிட்டு உள்ள அறிக்கையில், 2.18 லட்சம் வீடுகள் முற்றிலும் அழிவடைந்துள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.