November 24, 2024

Tamil Avani News

மெய்ப்பொருள் காண்பது அறிவு

‘ஜேம்ஸ் வெப்’ மூலம் எடுக்கப்பட்ட வியாழன் கிரகத்தின் படம்!

‘ஜேம்ஸ் வெப்’ தொலைநோக்கி மூலம் எடுக்கப்பட்ட வியாழன் கிரகத்தின் புகைப்படத்தை அமெரிக்க விண்வெளி ஆய்வு நிறுவனமான நாசா வெளியிட்டுள்ளது.

கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் சக்திவாய்ந்த விண்வெளி தொலைநோக்கியான ‘ஜேம்ஸ் வெப்’ தொலைநோக்கியை நாசா விண்ணில் ஏவியது.

விண்வெளி ஆய்விற்காக 10 பில்லியன் டொலர் செலவில் உருவாக்கப்பட்ட இந்த தொலைநோக்கி மூலம் எடுக்கப்பட்ட பிரபஞ்சத்தின் தொடக்க கால படங்கள், விண்மீன் திரள்கள் உள்ளிட்ட படங்கள் அண்மையில் வெளியிடப்பட்டன.

இந்த நிலையில், தற்போது அந்த தொலைநோக்கி மூலம் எடுக்கப்பட்ட வியாழன் கிரகத்தின் புகைப்படத்தை நாசா வெளியிட்டுள்ளது.