பிரிட்டன் இளவரசர் வில்லியம் கடந்த ஏப்ரல் மாதம் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்ட நிலையில், அதனை வெளியிடாமல் இரகசியமாக வைத்திருந்ததாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
கடந்த மார்ச் இறுதியில் இளவரசர் சாள்ஸுக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்ட நிலையில் அரச குடும்பத்தைச் சேர்ந்த பலருக்கும் பாதிப்பு ஏற்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.எனினும், இந்த தகவலை பிரிட்டன் அரண்மனை வட்டாரங்கள் மறுத்து வந்தன.
இளவரசர் சாள்ஸுக்கு கொரோனா தொற்று உறுதியான அதே காலகட்டத்தில் அவரது மூத்த மகனான வில்லியமுக்கும் தொற்று ஏற்பட்டதாக தற்போது தகவல்கள் வெளியாகியுள்ளன.
நாட்டில் மிகவும் முக்கியமான விடயங்கள் நடந்து கொண்டிருப்பதால், இதனைத் தெரிவித்து யாரையும் கவலைப்படுத்த விரும்பாததால் தனது பாதிப்பு குறித்த விவரங்களை வில்லியம்ஸ் நாட்டுக்கு தெரிவிக்கவில்லை எனவும் கூறப்படுகின்றது.