June 14, 2025 7:32:19

Tamil Avani News

மெய்ப்பொருள் காண்பது அறிவு

உலக சுகாதார அமைப்பின் தலைவர் சுய தனிமைப்படுத்தலில்

கொரோனா வைரஸ் தொற்றுள்ள நபருடன் தொடர்பில் இருந்த காரணத்தால் உலக சுகாதார அமைப்பின் தலைவர் டெட்ரோஸ் அதானோம் கெப்ரேயஸ், தன்னை சுயதனிமைப்படுத்திக் கொண்டுள்ளார்.

உலக சுகாதார அமைப்பின் தலைவர் இதனை தனது டுவிட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.

தன்னுடன் தொடர்பில் இருந்தவருக்கு கொரோனா வைரஸ் உறுதி செய்யப்பட்டுள்ளது என குறிப்பிட்டுள்ள  அவர் உலக சுகாதார அமைப்பின் விதிமுறைகளின்படி தன்னை தனிமைப்படுத்திக் கொண்டுள்ளதாக கூறியுள்ளார்.

அத்துடன், தான் நலமுடன் உள்ளதாகவும், இதுவரை எந்தவிதமான கொரோனா அறிகுறியும் தென்படவில்லை என்றாலும் வீட்டில் இருந்தே பணிபுரிவதாகவும் அவர்  குறிப்பிட்டுள்ளார்.