சீனாவின் கடும் எதிர்ப்பையும் மீறி அமெரிக்க சபாநாயகர் நான்சி பெலோசி தாய்வானுக்கான விஜயமொன்றை மேற்கொண்டுள்ளார்.
ஆசியாவில் சில நாடுகளுக்கு பயணம் மேற்கொள்ளும் அவர், செவ்வாய்க்கிழமை தாய்வானுக்கு விஜயம் மேற்கொண்டிருந்தார்.
25 வருடங்களின் பின்னர் அமெரிக்க உயர் அதிகாரியொருவர் தாய்வான் செல்லும் சந்தர்ப்பம் இதுவாகும்.
தமது எச்சரிக்கையையும் மீறி தங்களின் ஆட்சி எல்லைக்குள் உள்ள தைவானுக்கு அமெரிக்க சபாநாயகர் சென்றிருப்பது மிகவும் ஆபத்தானது என்றும், அமெரிக்கா நெருப்புடன் விளையாடுகின்றது என்றும் சீனா கூறியுள்ளது.
இந்நிலையில், நான்சி பெலோசியின் பயணம் சர்ச்சையையோ, மோதலையோ ஏற்படுத்துவதற்கான எந்தக் காரணமும் இல்லை என்று அமெரிக்கா தெரிவித்துள்ளது.
இதேவேளை, தனது பயணம் நீண்ட கால அமெரிக்காவின் கொள்கைக்கு இசைவானது என்றும் எந்த நாட்டின் இறையாண்மையையும் மீறவில்லை என்றும் நான்சி பெலோசி தெரிவித்துள்ளார்.
Our visit reiterates that America stands with Taiwan: a robust, vibrant democracy and our important partner in the Indo-Pacific. pic.twitter.com/2sSRJXN6ST
— Nancy Pelosi (@SpeakerPelosi) August 2, 2022