
அல்-கைதா அமைப்பின் தலைவர் அய்மன் அல்-ஜவாஹிரி கொல்லப்பட்டுள்ளதாக அமெரிக்கா அதிபர் ஜோ பைடன் அறிவித்துள்ளார்.
ஆப்கானிஸ்தான் காபூல் நகரில் ஞாயிற்றுக்கிழமை சிஐஏ நடத்திய ஆளில்லா விமானத் தாக்குதலில் அவர் கொல்லப்பட்டுள்ளதாக ஜோ பைடன் தெரிவித்துள்ளார்.
காபூலில் உள்ள தனது இரகசிய வீட்டில் ஜவாஹிரி இருந்தபோது ஆளில்லா விமானம் மூலம் இரண்டு ஏவுகணைகளை அவர் மீது வீசியதாகவும், அதில் அவர் கொல்லப்பட்டுள்ளதாக அதிகாரிகள் உறுதிப்படுத்தியுள்ளதாகவும் ஜோ பைடன் கூறியுள்ளார்.
அமெரிக்க மக்களுக்கு எதிரான கொலை மற்றும் வன்முறையின் தடத்தை உருவாக்கிய பயங்கரவாத தலைவர் இப்போது உயிருடன் இல்லை என்று அமெரிக்க அதிபர் நாட்டு மக்களுக்கு உரையாற்றி தெரிவித்துள்ளார்.
I’m addressing the nation on a successful counterterrorism operation. https://t.co/SgTVaszA3s
— President Biden (@POTUS) August 1, 2022
11 ஆண்டுகளுக்கு முன்பு ஒசாமா பின்லேடன் கொல்லப்பட்டதை தொடர்ந்து அந்த அமைப்பின் தலைவராக ஜவாஹிரி செயற்பட்டு வந்தார்.
அவர் தொடர்பாக கடந்த வருடங்களாக விசேட நடவடிக்கைகளை முன்னெடுத்து வந்துள்ள அமெரிக்க சீஐஏ, ஞாயிற்றுக்கிழமை அவரை கொன்றுள்ளதாக தெரிவித்துள்ளது.