ஈராக் பாராளுமன்றத்தை போராட்டக்காரர்கள் கைப்பற்றியுள்ளனர்.
பாதுகாப்பு படையினரின் தடைகளையும் மீறி பக்தாத்தில் உள்ள உயர் பாதுகாப்பு வலயத்தை உடைத்துக்கொண்டு நூற்றுக்கணக்கான போராட்டக்காரர்கள் புதன்கிழமை பாராளுமன்றத்திற்குள் நுழைந்துள்ளதாக சர்வதேச செய்திகள் தெரிவிக்கின்றன.
போராட்டக்காரர்கள் மீது பொலிஸார் கண்ணீர்ப் புகை மற்றும் நீர்த்தாரை பிரயோகங்களை மேற்கொண்ட போதும், போராட்டக்காரர்களை தடுக்க முடியாது போயுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
ஆட்சி பொறுப்பை ஏற்பது தொடர்பாக கூட்டணி கட்சிகளுக்கு இடையே முரண்பாடுகள் ஏற்பட்டுள்ள நிலையில், மொஹமட் அல் சுடானியின் பெயர் பிரதமர் பதவிக்காக அறிவிக்கப்பட்டுள்ளது.
இதனை எதிர்த்து மதகுரு முக்தாதா அல் சதருடைய ஆதரவாளர்கள் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.