January 20, 2025

Tamil Avani News

மெய்ப்பொருள் காண்பது அறிவு

துப்பாக்கிச் சூட்டில் காயமடைந்த முன்னாள் பிரதமர் காலமானார்!

துப்பாக்கிச் சூட்டில் காயமடைந்திருந்த ஜப்பானின் முன்னாள் பிரதமர் ஷின்சோ அபே காலமானார்.

ஜப்பானின் நாரா நகரில் நடைபெற்ற கூட்டத்தின் போது, அவரின் பின்னால் இருந்த நபரொருவர் இந்த துப்பாக்கிச் சூட்டை மேற்கொண்டள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

இதன்போது காயமடைந்த ஷின்சோ அபே, மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு தீவிர சிகிச்சைக்கு உட்படுத்தப்பட்ட போதும், சிகிச்சைப் பலனின்றி உயிரிழந்துள்ளதாக சர்வதேச செய்திகள் தெரிவிக்கின்றன.

2006 – 2007 மற்றும் 2012 – 2020 வரை பிரதமராக பதவி வகித்த ஷின்சோ அபே,ஜப்பானில் நீண்ட காலம் பிரதமராக இருந்தவர் என்ற இடத்தையும் பிடித்துள்ளார்.

இந்நிலையில் இவரின் மரணத்திற்கு உலகத் தலைவர்கள் பலரும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.

இதேவேளை துப்பாக்கிச் சூட்டு சம்பவம் தொடர்பில் சந்தேகநபர் ஒருவரை நாரா நகர பொலிஸார் கைது செய்துள்ளதாக சர்வதேச ஊடகங்கள் தெரிவித்துள்ளன.