January 20, 2025

Tamil Avani News

மெய்ப்பொருள் காண்பது அறிவு

ஷின்சோ அபே மீது துப்பாக்கிச் சூடு!

கூட்டமொன்றில் உரையாடிக்கொண்டிருந்த ஜப்பானின் முன்னாள் பிரதமர் ஷின்சோ அபே மீது துப்பாக்கிச் சூடு மேற்கொள்ளப்பட்டுள்ளது.

ஜப்பானின் நாரா நகரில் நடைபெற்ற கூட்டத்தின் போது, அவரின் பின்னால் இருந்த நபரொருவர் இந்த துப்பாக்கிச் சூட்டை மேற்கொண்டள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

இதன்போது காயமடைந்த ஷின்சோ அபே, மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

இதேவேளை துப்பாக்கிச் சூட்டு சம்பவம் தொடர்பில் சந்தேகநபர் ஒருவரை நாரா நகர பொலிஸார் கைது செய்துள்ளதாக சர்வதேச ஊடகங்கள் தெரிவித்துள்ளன.